வில்லியனூரில் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி வினோத் கைது
புதுச்சேரி வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் பாபு என்பவரது அரிசி கடைக்கு சென்ற பிரபல ரவுடி வினோத் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். கடை உரிமையாளர் பாபு மாமூல் தர திட்டவட்டமாக மறுத்ததால் ஆத்திரமடைந்த வினோத் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து வில்லியனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் மணவெளி பைபாஸ் சாலையில் பதுங்கியிருந்த ரவுடி வினோத்தை போலீசார் சுற்றி வளைத்தபோது, தப்பியோட முயன்றதில் அவரது கை முறிந்து காலிலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ரவுடி வினோத்தை வில்லியனூர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
In brief (English)
Puducherry police arrested notorious history-sheeter Vinoth after he threw petrol bombs at a rice shop in Villianur when the owner refused to pay extortion money.