தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகனியாவை ஆதரித்து ஐ.பி.செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

தாராபுரம்:
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி. சுகனியா அவர்களை ஆதரித்து, திமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசியுடனும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவுடனும் களம் காணும் வேட்பாளர் சுகனியாவை ஆதரித்து தொகுதி முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான அர.சக்கரபாணி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தாராபுரம் கிழக்கு ஒன்றியம், கொங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட உண்டாரபட்டி கிராமப் பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதி மக்களிடையே திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கழகத்தின் ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர். கிராமப் பொதுமக்களும் வேட்பாளரின் பிரச்சாரக் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



