புதுச்சேரி

புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் மாணவர்களுக்கான விண்வெளி தொழில்நுட்பப் பயிற்சி முகாம்: எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் காணொலி வாயிலாக கலந்துரையாடல்!

புதுச்சேரி:

புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பப் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. ‘மிஷன் ரூமி ட்வின் – 2026’ (Mission Rhumi Twin – 2026) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு மற்றும் செயல்முறைப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டு நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி பருவத்திலேயே நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் காணொளிக் காட்சி (Video Call) வாயிலாக நேரலையில் இணைந்து மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, விண்வெளித் துறையில் உள்ள எதிர்கால வாய்ப்புகள், புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மாணவர்களும் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

எதிர்கால தலைமுறையினரிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிவியல் திறனை மேம்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட இந்த சிறப்புப் பயிற்சி முகாம், மாணவ, மாணவியரிடையே பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன