காரைக்கால்

காரைக்கால் நெடுங்காடு அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் தொடங்கி வைத்துப் பாராட்டு!

காரைக்கால்:

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்பாற்றல் மற்றும் அறிவியல் திறன்களை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியை நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் மருத்துவருமான டாக்டர் V. விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ., முறைப்படி தொடங்கி வைத்தார். பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட அவர், மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்த பல்வேறு புதுமையான அறிவியல் மாதிரிகளையும், செய்முறை விளக்கங்களையும் ஆர்வத்துடன் கேட்டறிந்து மாணவர்களை வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் திரு. துரை சேனாதிபதி, மாவட்ட துணைத்தலைவர் திரு. சோமு (எ) இளங்கோவன், நெடுங்காடு வன்னியர் சங்கத் தலைவர் திரு. கலியமூர்த்தி, பாஜக தொகுதி தலைவர் திரு. அண்டூர் K. மோகன் மற்றும் தொகுதியின் முக்கிய பிரமுகர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கான புதுமையான சிந்தனைகளையும் ஊக்குவிக்கும் உன்னத நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அறிவியல் கண்காட்சி, மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் சிறந்த களமாக அமைந்திருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன