புதுச்சேரி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எட்வர்ட் குபேர் நினைவு தினம் அனுசரிப்பு

புதுச்சேரியின் முதல் முதலமைச்சரும் ‘நகர தந்தை’ என போற்றப்படுபவருமான பாப்பா எட்வர்ட் குபேரின் நினைவு தினம் புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடற்கரை பாரதி பூங்கா அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.வைத்திலிங்கம் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

In brief (English)

Leaders across political lines in Puducherry paid floral tributes to the Union Territory’s first Chief Minister, Edouard Goubert, on his death anniversary.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன