புதுச்சேரி

சுதந்திர தின வாழ்த்து: நாட்டின் பெருமையையும் புதுவையின் சிறப்பையும் காக்க முதல்வர் ரங்கசாமி அழைப்பு

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் தங்களின் ரத்தம் சிந்தி பெற்றுத் தந்த இந்த விடுதலை நாளில் முன்னோர்களின் தியாகங்களையும் அறப்போராட்டங்களையும் நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவது அனைவரின் கடமை என குறிப்பிட்டுள்ளார். மேலும், 1962-ல் இந்திய ஒன்றியத்துடன் இணைந்த பிறகு புதுச்சேரி அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது என்று அவர் புகழாரம் சூட்டினார். இந்த இனிய நாளில் இந்தியாவின் பெருமையையும் புதுச்சேரி மாநிலத்தின் சிறப்பையும் போற்றி பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

In brief (English)

Puducherry Chief Minister N. Rangasamy greeted the public on the eve of the 80th Independence Day, recalling the sacrifices of freedom fighters.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன