புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் தீவிர விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை
நாடு முழுவதும் விமான நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (BCAS) உத்தரவிட்டதை தொடர்ந்து, புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அவசரகால சூழலை எதிர்கொள்ளும் வகையில் விமான நிலைய பாதுகாப்பு பிரிவின் விரைவு அதிரடிப்படையினர் கடத்தல்காரராக வேடமிட்ட நபரை லாவகமாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இந்த ஒத்திகையில் இந்திய விமான நிலைய ஆணையம், புதுவை மாநில தீயணைப்பு துறை, காவல்துறை, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழு, இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை தேசிய பாதுகாப்பு படை (NSG) அதிகாரி இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
In brief (English)
A comprehensive anti-hijack mock drill was held at Puducherry’s Lawspet Airport involving police, fire, medical, and NSG officials to test crisis response.