புதுச்சேரி

புதுச்சேரி மாணவர்கள் வடகிழக்கு இந்தியா செல்கின்றனர்! அஷ்டலட்சுமி இளைஞர் பரிமாற்றுத் திட்டத்தில் 20 பேர் தேர்வு

புதுச்சேரி, ஆகஸ்ட் 14: இந்திய அரசின் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மணிப்பூர் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) நடைபெறும் அஷ்டலட்சுமி இளைஞர் பரிமாற்றுத் திட்டம் 2026-ல் பங்கேற்க புதுச்சேரி அரசு கல்லூரிகளைச் சேர்ந்த 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் 10 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவர். இவர்கள் புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள். ஆகஸ்ட் 14 முதல் 27, 2026 வரை (14 நாட்கள்) மணிப்பூர் NIT-யில் நடைபெறும் இந்தத் திட்டத்தின் மூலம், வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வர்.

தேர்வு செய்யப்பட்ட 20 மாணவர்களும் இன்று (ஆகஸ்ட் 14) புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தச் சந்திப்பின்போது, அமைச்சர் மாணவர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன