புதுச்சேரி
முதலியார்பேட்டை: ஆடி திருவிழாவில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் பக்தர்களுக்கு கூழ் வழங்கினார்

புதுச்சேரி, ஆகஸ்ட் 14: புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி எம்.ஜி.ஆர். நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுயம்பு புத்துமாரியம்மன் ஆலயத்தில் 28-ஆம் ஆண்டு ஆடி திருவிழா இன்று (ஆகஸ்ட் 14) கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் பாஜக மாநில துணை தலைவருமான திருமிகு ஏ. பாஸ்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பக்தர்களுக்கு கூழ் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, பக்தர்களுக்குக் கூழ் வழங்கினார்.


