தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் புதுச்சேரியில் கைது
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு, மீனாட்சி மற்றும் லக்ஷ்மி ஆகிய மூன்று பெண்கள் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துணிக்கடைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் தனியாக வரும் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி திருடி வந்தனர். இவர்கள் ‘தீரோஸ்’ பெண் திருட்டு கும்பல் என காவல்துறையினரால் அழைக்கப்பட்டனர். சமீபத்தில் சென்னை மாம்பளத்தில் உள்ள இரு பிரபல துணிக்கடைகளில் திருடி தப்பிய இவர்களின் புகைப்படங்கள் புதுச்சேரி காவல் துறைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அண்ணாசாலையில் உள்ள துணிக்கடையில் இவர்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியக்கடை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக மூன்று பெண்களும் சென்னை மாம்பளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
In brief (English)
Puducherry police arrested three women from Madhya Pradesh belonging to the ‘Theeros’ gang, who were wanted for stealing money and valuables in Tamil Nadu and Andhra Pradesh. The suspects were identified in Anna Salai and subsequently handed over to Chennai’s Mambalam police for further investigation.