புதுச்சேரி
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் லட்சிய ஜனநாயக கட்சி, முத்தூட் அன்பின் நிழல் மற்றும் ஜோதி ஐ கேர் ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இம்முகாமில் ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பிசியோதெரபி ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
In brief (English)
A free medical camp offering eye, blood, and physiotherapy checkups was held at Puducherry Tamil Sangam, serving over 200 citizens.
