புதுச்சேரி
புதுச்சேரியில் சாதி, வருமான சான்றிதழ்களை பெற புதிய இணையவழி சேவை அறிமுகம்
புதுச்சேரியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்களை எளிதாக பெற புதிய இணையவழி சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பித்த பின் அதன் நிலையை இணையதளத்திலேயே அறிந்து கொள்ளவும், எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக உடனுக்குடன் தகவல்கள் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சேவைகள் விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
In brief (English)
Puducherry has launched an online service for residents and students to easily apply for caste, income, and residence certificates. Applicants can track their application status via SMS and email.
