புதுச்சேரி

புதுச்சேரியில் படைப்பாளர் இயக்கம் சார்பில் தமிழர் மரபுணவு கண்காட்சி: தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வியலை மீட்டெடுக்கும் நோக்கில் தமிழர் மரபுணவு கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின் சிறப்புத் தலைவர் புதுவைத் தமிழ்நெஞ்சன் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். பாவேந்தர் தமிழர் உணவகத்தின் ஆனந்தகுமார் தமிழர் மரபுணவு கண்காட்சியினை முறைப்படி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது தமிழர்களின் தொன்மையான உணவு முறைகளின் நன்மைகள், இயற்கை உணவுகளின் நற்குணங்கள் மற்றும் இன்றைய தலைமுறைக்கு மரபு உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாவாணன், தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க. தமிழமல்லன், தமிழர் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் சு. வேல்முருகன், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத்தைச் சேர்ந்த து. சடகோபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் கலக்கல் காங்கேயன், ஆறு. செல்வன், ஆதி. சுப. சரவணன், மகளிர் ஓசை தாமோதரன் மற்றும் ஓவியம் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு பாரம்பரிய உணவுப் பொருட்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன