தேசியம்

காமன்வெல்த் பதக்க வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் சந்தித்து வாழ்த்தினார். போட்டியில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்கள் வென்று, பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது.

வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின்னர் வீரர்களுடன் இணைந்து ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2030-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன. கிளாஸ்கோவில் நடைபெற்ற நிறைவு விழாவில், அடுத்த போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு விளையாட்டுப் போட்டிகளின் கொடியும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன