தேசியம்

ஹர் கர் திரங்கா இயக்கத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்று, தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தேசப்பற்று மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த இயக்கத்தில், பொதுமக்கள் ஆர்வமுடன் இணைந்து மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த அழைப்பை வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தேசியக் கொடியுடன் புகைப்படம் அல்லது செல்ஃபி எடுத்து, இயக்கத்தில் பங்கேற்கவும் அவர் மக்களை ஊக்குவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன