புதுச்சேரி
பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுக்கு ஏ. நமச்சிவாயம் பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி: பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுக்கு, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நிர்மல் குமார் சுரானா நீண்ட ஆயுளுடனும், நற்பணிகளுடனும் நீடூழி வாழ வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மற்றும் நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
