தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு: டி.டி.வி தினகரன் விமர்சனம்

சென்னை, ஆக. 19: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வாகனம், ஓட்டுநர் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் என கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு கஜானாவில் போதிய நிதி இல்லாத சூழலில், மக்கள் வரிப்பணத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இத்தகைய சலுகைகளை வழங்குவது, ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது’ போன்ற செயலாகும்” என்று விமர்சித்துள்ளார். மேலும், கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் தமிழகத்தில், இதுபோன்ற அறிவிப்புகள் தேவையற்ற செலவினங்களை அதிகரிக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நேரத்தில், மக்கள் பிரதிநிதிகளுக்கான இத்தகைய நிதிச் சுமையை அரசு தவிர்த்திருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன