சினிமா

பாரம்பரிய நகைகளுடன் ராஜகுமாரி பாவனையில் சம்யுக்தா ஷண்முகநாதன்

தமிழ் திரையுலகில் அறியப்பட்ட நடிகை சம்யுக்தா ஷண்முகநாதன், பாரம்பரிய முடி அலங்காரம் மற்றும் நகைகளுடன் கூடிய புகைப்படத் தொகுப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பச்சை-சிவப்பு நிற பட்டுப் புடவையுடன், முத்து மற்றும் தங்க நகைகள் அணிந்து ராஜகுமாரி பாவனையில் அவர் காட்சியளிக்கிறார். ‘ராஜகுமாரி பாவனை’ என புகைப்படங்களுடன் நடிகை குறிப்பிட்டிருந்தார்.

2007-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்ற சம்யுக்தா ஷண்முகநாதன், மலையாள படமான ‘ஓலு’ (2018) மூலம் நடிகையாக அறிமுகமானார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ தொடரிலும் நடித்த இவர், 2020-ம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் நான்காம் சீசனில் போட்டியாளராகப் பங்கேற்றார். முன்னாள் சிஎஸ்கே வீரர் அனிருத் ஸ்ரீகாந்தை 2025-ம் ஆண்டு மணந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன