புதுச்சேரி

புதுச்சேரியில் அதிர்ச்சி: குப்பையில் கொட்டப்பட்ட காலாவதியான பால் பாக்கெட்டுகள் – அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

புதுச்சேரி, ஆக. 19: புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் உள்ள காவலர் அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்புறம், காலாவதியான பால் பாக்கெட்டுகள் பெருமளவில் வீசப்பட்டிருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் பாக்கெட்டுகளை இதுபோன்று பொறுப்பற்ற முறையில் வீசியது, அப்பகுதி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்திருக்கலாம் என்ற அச்சத்தில், அப்பகுதி மக்கள் உரிய விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற செயல்கள் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். முறையான தணிக்கை இல்லாததே இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து பால் விற்பனை நிலையங்கள் மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன