புதுச்சேரி

குரு ரவிதாஸ் மகாராஜ் 650-வது நினைவு ஆண்டு: புதுச்சேரியில் புனித மண் ஊர்வலம்

புதுச்சேரி, ஆக. 19: பகவான் ஸ்ரீ குரு ரவிதாஸ் மகாராஜ் அவர்களின் 650-வது நினைவு ஆண்டை முன்னிட்டு, வாரணாசியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் புதுச்சேரியில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த புனித மண்ணானது புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட செங்கேணி அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புனித மண் பூஜை செய்யப்பட்டு முறையாகப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியின் ஐந்து மாவட்டங்களின் தலைவர்களிடம் அந்த புனித மண் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆன்மீக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குரு ரவிதாஸ் மகாராஜ் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் புனித மண் கொண்டு செல்லும் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த புனித மண் ஊர்வலமானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன