புதுச்சேரி

தேர்தல் பணி வாடகை பாக்கி: புதுச்சேரி தேர்தல் ஆணையம் முன் கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட வாடகை கார்களுக்கு உரிய வாடகை கட்டணத்தை வழங்காமல் தேர்தல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாகக் கூறி கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் வாடகை வழங்கப்படாததால் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒப்பந்தப்படி உடனடியாக நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் அடுத்தகட்டமாகப் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

In brief (English)

Rental car owners and drivers staged a protest outside the Election Commission office in Reddiarpalayam over delayed rental payments for election duty. They warned of larger protests if the dues are not cleared immediately.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *