புதுச்சேரி

கரிக்கலாம்பாக்கம் SRK பள்ளியில் மண்டல அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி

புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மண்டலம் 3-ற்கான யோகா சாம்பியன்ஷிப் போட்டி 2024-25 கரிக்கலாம்பாக்கம் எஸ்ஆர் கே மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரியின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் மகேந்திரன் தலைமை தாங்கி யோகாவின் உடல் மற்றும் மனநல நன்மைகள் குறித்து உரையாற்றினார். மாணவர்கள் ஒழுக்கத்துடன் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்களை ஆசிரியர்களும் அதிகாரிகளும் பாராட்டி வாழ்த்தினர்.

In brief (English)

Over 500 school students competed in the Zone 3 Yoga Championship at SRK Higher Secondary School in Karikalampakkam. School management and education officials appreciated the performers.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *