புதுச்சேரி
டி.என். பாளையத்தில் சுடுகாட்டு சாலை பணி துவக்கம் – மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கிய எம்எல்ஏ ராமு
புதுச்சேரி மணவெளி தொகுதி டி.என். பாளையம் காலனி பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை ரூ.6.95 லட்சம் செலவில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் தார் சாலையாக அமைக்கும் பணி தொடங்கியது. பூமி பூஜை செய்து பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராமு தொடங்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை எம்எல்ஏ ராமு வழங்கி வாழ்த்தினார்.
In brief (English)
Manavely MLA Ramu inaugurated a tar road project leading to the local burial ground in TN Palayam. He also distributed free uniforms to students of the nearby government middle school.