புதுச்சேரி
குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில் ஆடி மாத குரு பூர்ணிமை சிறப்பு பூஜை
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ யோகமாயா லலிதாம்பிகை மற்றும் ஸ்ரீ மகா சாம்ராஜ்ய லலிதாம்பிகை திருக்கோவிலில் ஆடி மாத குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோபூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை ஆகியவை விமரிசையாக நடைபெற்றன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சோடச தீப ஆராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
In brief (English)
Special Guru Poornima rituals and pujas were conducted at the Sri Yogamaya Lalithambigai Temple in Kurumampet, Puducherry. Devotees participated in Go-puja, Kanya puja, and Sumangali puja during the event.