புதுச்சேரி
லட்சிய ஜனநாயக கட்சியில் இளைஞரணி தலைவர் பிறந்தநாளில் 20க்கும் மேற்பட்டோர் இணைவு
புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் இளைஞரணி தலைவர் பிரகாஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரெட்டியார்பாளையத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
In brief (English)
More than 20 supporters joined the Latchiya Jananayaga Katchi in Puducherry during the birthday celebration of Youth Wing Leader Prakash.