புதுச்சேரி
தேர்தல் பணிக்கான வாடகைத் தொகை கோரி கார் உரிமையாளர்கள் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் தேர்தல் பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கணக்கான வாடகைக்கார்கள் அமர்த்தப்பட்டன. தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் வாடகை கட்டணத்தை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். இதனைக் கண்டித்து ரெட்டியார்பாளையத்தில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவைத் தொகையை உடனடியாக வழங்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
In brief (English)
Dozens of rental car owners staged a demonstration outside the Puducherry election office protesting the delay in settling vehicle rental fees for election duty.