புதுச்சேரி
புதுச்சேரியில் காசநோயாளிகளுக்கு 250 ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் வழங்கள்
காசநோய் இல்லாத பாரதம் என்ற பிரதமரின் இலக்கை அடையும் வகையில் புதுச்சேரியில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வேர்ல்ட் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பாக 250 ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் குளோத்துங்கன் முன்னிலையில், இந்நிறுவனத் தலைவர் சிவராமகிருஷ்ணன் மாநில காசநோய் அதிகாரி டாக்டர் வெங்கடேஷிடம் இந்த உணவுப் பெட்டகங்களை ஒப்படைத்தார்.
In brief (English)
As part of the TB Elimination Scheme, 250 nutrition kits donated by a private company were handed over to health authorities in Puducherry.