மாணவர்களுக்கான ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு நேரில் அழைப்பு!

புதுச்சேரி:
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் மார்டின் குழுமம், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் குளோபல் ஹெல்ப் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால விண்வெளி ஆய்வாளர்களை உருவாக்கும் வகையிலும், இளம் தலைமுறையினரிடையே விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சிறப்பு ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஸ்பேஸ் சோன் இந்தியா (Space Zone India) நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், குளோபல் ஹெல்ப் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிர்வாகி மூர்த்தி மற்றும் எல்.ஜே.கே (LJK) நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்து அமைச்சரிடம் அழைப்பிதழை வழங்கினர்.


