புதுச்சேரி

புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் ரூ.350 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் என். ரங்கசாமி சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (சிகப்பு நிற) குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் மானியம் ரூ.300-லிருந்து ரூ.350 ஆக உயர்த்தப்படுகிறது.

இதேபோன்று, இதர குடும்ப அட்டைதாரர்களுக்கு (மஞ்சள் நிற அட்டை) வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் மானியத் தொகை ரூ.150-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடிப் பலன் பெறவுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன