ஆன்மீகம்

மண்ணாடிப்பட்டு ஸ்ரீ செங்கழநீர் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கொடாத்தூர் – முட்ராம்பட்டு பகுதிகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செங்கழநீர் மாரியம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் மற்றும் மகா பூர்ணாஹுதி தீபாராதனைகள் வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி நடைபெற்றன. தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அம்மனை பயபக்தியுடன் தரிசித்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் திரளான கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன