தமிழ்நாடு

ஜி.கே. மூப்பனாரின் 25-வது நினைவு தினம்: சென்னையில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை!

சென்னை: மறைந்த காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய தலைவர்களில் ஒருவருமான ஜி.கே. மூப்பனாரின் 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் ஜி.கே. மூப்பனாரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி அவரது பொதுவாழ்வு சாதனைகளையும், தேசப்பணியையும் நினைவு கூர்ந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மூத்த தலைவர் தமிழருவி மணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் ரூபி மனோகரன், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன