தமிழ்நாடு

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்று அசத்திய கடலூர் மாவட்ட தலைமை காவலர்கள்!

கடலூர்: சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை காவலர்கள் பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் சென்னை ஒத்திவாக்கத்தில் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை வீரர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியில் கார்பைன் (Carbine) பிரிவில் கடலூர் மாவட்டத்தின் சார்பாக தலைமை காவலர் வினோத்குமார் கலந்துகொண்டு ‘பெஸ்ட் ஷாட்’ (Best shot) பிரிவில் 3-ஆம் இடத்தைப் பிடித்தார். மேலும், மற்றொரு தலைமை காவலரான கிருஷ்ணராஜுடன் இணைந்து ஒட்டுமொத்த கார்பைன் பிரிவில் 2-ஆம் இடம் பிடித்து வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றினர்.

மாநில அளவில் பதக்கங்களை வென்று மாவட்ட காவல்துறைக்குப் பெருமை சேர்த்த தலைமை காவலர்கள் வினோத்குமார் மற்றும் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன