தமிழ்நாடு
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது
தாராபுரம், அக்டோபர் 20: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்டது மற்றும் முதல்வர் வருகையின் போது போராட்டத்தில் ஈடுபட்டது ஆகிய காரணங்களுக்காக காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நாதக வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளதற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.