தமிழ்நாடு
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து விற்பனை
சென்னை, அக்டோபர் 20: சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில், இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் 47,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, நான்காவது நாளாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.