புதுச்சேரி

புதுச்சேரி பாரதி பூங்காவில் அபாயகரமான மரம், இரும்புக் கம்பிகள்: எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் அதிரடி ஆய்வு!

புதுச்சேரி, செப். 6:

புதுச்சேரியின் முக்கிய அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகவும் விளங்கும் பாரதி பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் விளையாடும் இடத்தில் மரம் ஒன்று முறிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாகவும், மேலும் அங்குள்ள இரும்புக் கம்பிகள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன.

பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் இந்த அவசரப் புகாரைத் தொடர்ந்து, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் இன்று பாரதி பூங்காவிற்கு நேரில் சென்று விரிவான கள ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகள் விளையாடும் பகுதியில் உள்ள ஆபத்தான மரம் மற்றும் சேதமடைந்த இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து, பூங்காவிற்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆபத்தான மரத்தை அகற்றுவது மற்றும் இரும்புக் கம்பிகளைச் சீரமைப்பது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், நாளைக்குள் இப்பணிகளை முழுமையாக முடித்து தனக்கு விவரத்தைத் தெரிவிக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன