புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அசோக் ஆனந்த் போட்டி – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரி, செப். 5:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் என்.ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி இரு தொகுதிகளில் ஒன்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழலில், அவர் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் களம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அசோக் ஆனந்த் களம் இறங்குவார் என்றும், அவர் கட்சியின் ‘ஜக்கு’ சின்னத்தில் போட்டியிட்டு இமாலய வெற்றி பெறுவார் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.வான அசோக் ஆனந்த் மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன