அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை: அதிமுக தலைமை நிலையமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். சமகால அரசியல் கள நிலவரங்கள், கட்சியின் உட்கட்டமைப்பு பலப்படுத்துதல் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக முன்னெடுக்க வேண்டிய களப் போராட்டங்கள் மற்றும் எதிர்கால மக்கள் சந்திப்பு திட்டங்கள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன