புதுச்சேரி

ஜிப்மர் பிஎஸ்சி நர்சிங் சேர்க்கைக்கு செப்.5 முதல் விண்ணப்பிக்கலாம்

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி அலைட் சயின்ஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கி, 28ஆம் தேதி மாலை 4 மணி வரை தொடரும். நீட் மதிப்பெண் அடிப்படையில் இந்த சேர்க்கை நடைபெற உள்ளது.

வயது வரம்பு, கல்வித் தகுதி, இட ஒதுக்கீடு மற்றும் கட்டண விவரங்கள் அடங்கிய விரிவான தகவல்கள் ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன