புதுச்சேரி
புதுவை நீதிமன்ற வளாகத்தில் அக்.1 முதல் சமரச தீர்வு முகாம்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதை நோக்கமாகக் கொண்டு, “தேசத்திற்கான சமரசம் 3.0” என்ற தலைப்பில் நாடு முழுவதும் மாவட்ட சமரச தீர்வு மையங்களில் முகாம் நடத்தப்பட உள்ளதாக புதுச்சேரி மாவட்ட சமரச தீர்வு மையத்தின் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதுவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு முகாம் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சமரசம் மூலம் தீர்வு காணக்கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.