புதுச்சேரி

பொறியியல் 2ஆம் கட்ட கலந்தாய்வில் 6250 இடங்கள் ஒதுக்கீடு: செப்.8ல் சேர வேண்டும்

முதல் கட்ட கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3671 மாணவர்கள் கல்லூரியில் சேராத நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான வரைவு ஒதுக்கீட்டு பட்டியலை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அளித்த விருப்பங்களின் அடிப்படையில் மொத்தம் 6250 இடங்கள் இரண்டாம் கட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; இதில் 2810 இடங்கள் பொறியியல் படிப்புகளுக்கும், 2081 இடங்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும், மீதமுள்ளவை பிற தொழில்முறை படிப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் அசல் சான்றிதழ்கள், உரிய கட்டணம் மற்றும் ஒதுக்கீட்டு ஆணையுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியின் முதல்வரை நேரில் சந்தித்து செப்டம்பர் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன