புதுச்சேரி
ஜிஎஸ்எல்வி எஃப்7 வெற்றிகரமான ஏவுதலுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஎஸ்எல்வி எஃப்7 அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாகவும், இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கைக்கோள் வேளாண்மை, நீர்வள மேலாண்மை, நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.