புதுச்சேரி
பட்டாசு நிலுவைத் தொகை விவகாரம்: புதுச்சேரி பாப்ஸ்கோ சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வருகை
புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாப்ஸ்கோ, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சோனி ஃபயர்ஒர்க்ஸ் நிறுவனத்திடம் 2019 ஆம் ஆண்டு பட்டாசு வாங்கியதில் ரூ.25 லட்சம் நிலுவை வைத்திருந்தது. வட்டியுடன் சேர்த்து ரூ.35 லட்சம் வழங்க உத்தரவிட்டும் பாப்ஸ்கோ பணம் செலுத்தாததால், நீதிமன்றம் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜப்தி செய்ய பாப்ஸ்கோ அலுவலகத்திற்கு வந்தனர். மேலாண் இயக்குநர் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்காக ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
In brief (English)
Court officials visited the PAPSCO office in Puducherry to attach its assets following non-payment of Rs 35 lakh dues for firecrackers purchased in 2019.