புதுச்சேரி

புதுச்சேரியின் சிறந்த காவல் நிலையம்: அரியாங்குப்பத்திற்கு விருது வழங்கி கௌரவித்த முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி, ஆக. 17: புதுச்சேரி காவல்துறை சார்பில் இந்த ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக அரியாங்குப்பம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை முதலமைச்சர் என். ரங்கசாமி அரியாங்குப்பம் காவல் நிலைய அதிகாரிகளிடம் வழங்கினார்.

காவல் பணிகளைச் செவ்வனே ஆற்றுதல், பொதுமக்களுடன் இணக்கமான உறவை மேம்படுத்துதல், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் காட்டிய உறுதி மற்றும் அலுவலக நிர்வாகச் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெற்றது. சிறப்பாகச் செயல்பட்டதற்காக அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் என். ரங்கசாமி விருதுகளை வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன