புதுச்சேரி
அபிஷேகப்பாக்கம் பகுதியில் சுய உதவிக்குழுக்களின் விற்பனை அங்காடியை எம்எல்ஏ ராமு திறந்து வைத்தார்
புதுச்சேரி, அக்டோபர் 21: அபிஷேகப்பாக்கம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை ஒருங்கிணைந்து விற்பனை செய்வதற்கான புதிய விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் அபிஷேகப்பாக்கம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் இந்த விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமு கலந்துகொண்டு விற்பனை அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்ிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தரி, விரிவாக்க அதிகாரி சவரிராஜன், கிராம சேவகர்கள், திட்டப் பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.