புதுச்சேரி
புதுச்சேரியில் புதுவை தமிழ் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
புதுச்சேரி, அக்டோபர் 20: புதுச்சேரி வெங்கட்டாநகர் பகுதியில் அமைந்துள்ள புதுவை தமிழ் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா நடைபெற்றது.
புதுவை தமிழ் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் முத்து தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், எழுத்தாளரும் முன்னாள் பொது மேலாளருமான குரல் இனிது சோம வீரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் மொழியின் சிறப்பையும் திருக்குறளின் உயரிய கருத்துக்களையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், கல்விச் செம்மல் பாலன், சீனு மோகன்தாஸ் உள்ளிட்ட தமிழ் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.