புதுச்சேரி

தேசிய அளவிலான குராஷ் போட்டிக்கு புதுவை வீரர்களை தேர்வு செய்யும் முகாம்

புதுச்சேரி, அக்டோபர் 20: உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குராஷ் தற்காப்பு கலை போட்டிகளில் பங்கேற்கும் புதுவை வீரர்களை தேர்வு செய்யும் முகாம் முத்திரையார்பாளையத்தில் நடைபெற்றது.

முத்திரையார்பாளையம் ஆதித்யா பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்வு முகாமில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் வரும் டிசம்பர் 16 முதல் 20ஆம் தேதி வரை 70வது தேசிய பள்ளிகளுக்கு இடையிலான குராஷ் தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு அடுத்த கட்டமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன