தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை எதிரொலி: ஏழு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை

சென்னை, அக்டோபர் 20: சென்னை, திருவண்ணாமலை, விருதுநகர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரை நகரில் கொட்டிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேலும் ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. தண்ணீர் வெளியேற வழியின்றி உள்ளே தேங்கியதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன