தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் மாவட்ட அமைப்பு மறுசீரமைப்புக் குழுக் கூட்டம்: தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் தீவிர ஆலோசனை!

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது மற்றும் அடிமட்ட அளவில் கட்சியை தீவிரமாக வழிநடத்துவது தொடர்பான மாவட்ட அமைப்பு மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள், மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் நேரில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்து கட்சியின் சீரமைப்புப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினர். மேலும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கனெக்ட் சென்டர் தலைவர் திரு. ஏ.ஜி. சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் உடனிருந்தனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் செயல்பாடுகளை மறுசீரமைப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. மாவட்டப் பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கள நிலவரம், பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த கருத்துக்களை மாநிலத் தலைமையிடம் பகிர்ந்துகொண்டனர்.

கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தல், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நவீன தொடர்பியல் உத்திகள் மற்றும் ‘கனெக்ட் சென்டர்’ வாயிலாக களப் பணிகளை கண்காணிப்பது ஆகியவை குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மாவட்ட அமைப்புகளை மேலும் வலிமைப்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன