புதுச்சேரி

பொதுப்பள்ளியில் டைல்ஸ் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

புதுச்சேரி, அக்டோபர் 20: கடலூர் மாவட்டம் கரிக்க நகரைச் சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி பிரவீண்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை தவளக்குப்பம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெட்டிச்சாவடி அருகில் உள்ள கரிக்க நகரைச் சேர்ந்த பிரவீண்குமார் (27) என்பவர் கடந்த 16ஆம் தேதி அபிஷேக பாக்கத்தில் காரில் வந்த கும்பலால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி தவளக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து வில்லியனூர் அடுத்த கீழூர் பகுதியில் பதுங்கி இருந்த நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (33), அரம்பார்த்தபுரம் பாரதிதாசன் வீதியைச் சேர்ந்த கிஷோர் (22), தட்டாஞ்சவடி பகுதியைச் சேர்ந்த புகழ் (23), ரெட்டியார்பாளையம் பூமியான்பேட்டை விஜி (31), தருமபுரி வெங்கடேசன் (22), கனுவப்பேட்டை சிவகுமார் (22) ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

வானரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடியான பாம் ரவி கொலை வழக்கில் பிரவீண்குமார் சேர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இக்கொலை நிகழ்த்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் பயன்படுத்திய மாருதி ஸ்விஃப்ட் கார் மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாம் ரவியின் கூட்டாளியான வானரப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன