அரசியல்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரஸ் ஆதரவைக் கோரும் நேயம் மக்கள் கழக விநாயகம் தீவிர பேச்சுவார்த்தை!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஆதரவு கோரி, நேயம் மக்கள் கழகத்தின் விநாயகம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் போட்டியிட்டார். இத்தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்று அவர் 2-வது இடத்தைப் பிடித்து வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது வரவிருக்கும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட அவர் ஆயத்தமாகி வருகிறார். இதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, இன்று புதுச்சேரி காங்கிரஸ் தலைமை கட்சி அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்த விநாயகம், முன்னணி நிர்வாகிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த ஆதரவு கோரிக்கை தொடர்பான இறுதி முடிவு வரும் திங்கட்கிழமை முறைப்படி தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன